பெரியநாயகி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2024 02:08
கொட்டாம்பட்டி; பெரியநாயகி அம்மன் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
இத் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 30 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் சவுக்கையில் (புரவிகள் செய்யும் இடம்) இருந்து பெரியநாயகி அம்மன், சின்ன, பெரிய கருப்பு, மலையாண்டி சுவாமி சிலைகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று சுவாமி சிலைகள் மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வலைச்சேரிபட்டி கிராமத்து சார்பில் செய்யப்பட்ட இரண்டு புரவிகள் இடைமலை மற்றும் வல்லக்குடி அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். நாளை (ஆக 15) அம்மன் ஊருணியில் எருதுக்கட்டும் விழா நடைபெறும். இத் திருவிழாவில் வலைச்சேரிபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்.