அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2024 05:08
பாலசமுத்திரம்; பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி, அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொடிமரத்தின் முன் சங்கு, சக்கரம், கருடாழ்வார் வரையப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. ஆக.21ல் திருக்கல்யாணம், ஆக.22ல் பாரிவேட்டை, ஆக.23ல் தேரோட்டம் நடக்கிறது. ஆக.24ல் கொடியிறக்குதல், ஆக.25ல் விடையாற்றி உற்ஸவம் நடக்கிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.