ஆடி மூல நட்சத்திரம் ; அபீஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 04:08
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிறுமுகை அடுத்த தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இன்று ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. ரிஷி பட்டர் சிறப்பு பூஜையை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.