கோவை கொடிசியா, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் திருபவித்ரோசவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2024 11:08
கோவை ; கொடிசியா, திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் திருபவித்ரோசவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் வஜ்ரங்கி(வைரநகை) அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 15.08.2024 முதல் 19.08.2024வரை நடைபெற்றது. இதில் புண்ணியாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, பஞ்ச சுத்த ஹோமம், சர்வ அலங்கார சேவை ஆகியன நடைபெற்றது இதன் நிறைவு நாளை முன்னிட்டு மூலவர் வைர நகைகளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியானது தினமும் ஹோமத்துடன் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.