தாண்டிக்குடி மகா கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 11:08
தாண்டிக்குடி; தாண்டிக்குடி பெரும்பாறை புதுாரில் மகா கருமாரியம்மன், விஷ்ணு துர்க்கை, கோட்டை கருப்புசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி புனித நதியிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வர, விநாயகர் வழிபாடு, நிலத்தேவர், புனித மண் எடுத்தல் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.