கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09 ல் உள்ள காளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்வில் மூலவர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.