அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் தொண்டைமான், வடக்கு கோபுரங்கள், தாயார், ஆண்டாள், ஆஞ்ச நேயர், ராமர், கிருஷ்ணர் சன்னதி விமானங்களுக்கு இன்று (ஆக., 21) மாலை 5:00 முதல் 6:00 மணி வரை பூர்வாங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை காலை 9:00 முதல் மாலை 4:30 மணி வரை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ஆக., 23 காலை 8:30 முதல் 9:30 மணிக்குள் விமான பாலாலயம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.