காரமடை ஜெய மாருதி குரு ராகவேந்தர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2024 02:08
கோவை; காரமடை ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ குரு ராகவேந்தர் திருக்கோவிலில் 353 ஆம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை ஐந்து மணிக்கு மங்கள இசையுடன் துவங்கிய வைபவம், ஐந்து முப்பது மணிக்கு சுப்ரபாதம், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம். பால் தயிர் நெய் தேன் சந்தனம் மஞ்சள் குங்குமம் மூலிகை திரவியங்கள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அலங்கார பூஜை, குரு ராகவேந்திர ஸ்தோத்திர பாராயணம் மலர் அர்ச்சனை மங்கள ஆரத்தி உள்ளிட்டவை முடிந்து மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற்றது. கூட்டுப் பிரார்த்தனை மற்றும் மங்கள ஆரத்தியுடன் ஆராதனை விழா சிறப்பாக நிறைவு பெற்றது.