உத்தமலிங்கேஸ்வரர் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் : பணிகள் ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 12:08
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இரு கோவில்களிலும் கடந்த 2006 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில், முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி, இரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்துவதிற்காக தளம் அமைத்தல், வர்ணம் பூசுதல், கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்டப்பட்டது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வருகிற ஆகஸ்டு மாதம் 28 ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகமும் தொடர்ந்து, 9:00 மணி முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, இரு கோவில்களிலும் யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு பணியையையும் கவனிக்க அன்னதான கமிட்டி உள்ளிட்ட பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார், செயல் அலுவலர், முன்னாள் அறங்காவலர்கள், ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.