பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2024 03:08
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இரு கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற 28 ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகமும் தொடர்ந்து, 9:00 மணி முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரிகை கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கொண்டு மேள தாளம் முழங்க பட்டாசு வெடிக்க ஊர்வலமாக உத்தம லிங்கேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி மற்றும் கோவில் முன்னாள் நிர்வாகிகள் அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.