பதிவு செய்த நாள்
31
ஆக
2024
12:08
சென்னை; ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை: ‘அறநிலையத்துறை சார்பில், ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும்; புரட்டாசி மாதம் வைணவ கோவில்களுக்கும், தலா, 1,000 மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்து செல்லப்படுவர்’ என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மண்டலங்களில் அமைந்துள்ள, முக்கிய வைணவ கோவில்களுக்கு, புரட்டாசி மாதம், 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட உள்ளனர். செப்., 21, 28, அக்., 5, 12ம் தேதிகளில், அந்தந்த மண்டலங்களில் ஆன்மிக பயணம் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், இதற்கான விண்ணப்பங்களை, www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் பெற்றும் விண்ணப்பிக்கலாம். செப்., 19 விண்ணப்பிக்க கடைசி நாள்.
மேலும் விபரங்களுக்கு, அறநிலைய துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 425 1757, சென்னை, 044 – -2952 0937, 99417 20754; காஞ்சிபுரம், 044 – -2959 2380; விழுப்புரம், 0414 – 6-225 262; மயிலாடுதுறை, 0436 – 4-299 258, 88077 56474.
தஞ்சை, 0436 – 2-238 114; திருச்சி, 0431- – 2232 334; மதுரை, 0452- – 2346 445; துாத்துக்குடி, 0461 –- 2341 144; திருநெல்வேலி, 0462 – -2572 783 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.