உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா; நான்காம் நாளில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 10:09
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. நான்காம் நாளான நேற்று அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். வீதி உலா வந்த விநாயகரை தெருக்களில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றனர். முன்னதாக, மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.