திருப்பதியில் திரு நம்பி அவதார மஹோத்சவம்; செப்., 9ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2024 12:09
திருப்பதி; பிரபல வைஷ்ணவாச்சார்யா திருநம்பியின் 1051வது அவதார மஹோத்ஸவம் செப்., 9ம் தேதி தெற்கு மாட வீதியில் உள்ள திரு நம்பி கோயிலில் சிறப்பாக நடைபெற உள்ளது.
தினந்தோறும் போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கும், வெள்ளிக் கிழமை தோறும் மூலமூர்த்திக்கும் ஆகாச கங்கைத் தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கும். திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்த ஜலத்தை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு “திருமலை நம்பி” எனும் வைணவ ஆசாரியர் சுமந்து வந்து கைங்கர்யம் செய்து வந்தார். இவர் இராமாநுஜருக்கு ஆசாரியர். திருமலை நம்பி இராமானுஜருக்கு தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. திருவேங்கடமுடையான் திருமலை நம்பியை ஒரு சமயம் “தாதா” “தாதா” என்று அழைத்தாராம். இதன் அடிப்படையில்தான் இன்றும் இவ்வம்சத்தினரை திருமலை நம்பி தாதாசாரிய வம்சத்தினர் என அழைக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க திருமலை நம்பியின் 1051வது அவதார மஹோத்ஸவம் செப்., 9ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. திருமலை நம்பி கோவிலில், காலை 9:30 மணி முதல், ஸ்ரீ நம்பியின் வாழ்க்கை முறை மற்றும் பங்களிப்புகள் குறித்து பல்துறை அறிஞர்கள் சொற்பொழிவுகளை வழங்க உள்ளனர்.