வடமதுரை; வடமதுரை புதுகொம்பேரிபட்டி அருகே போடிமான் கரடு மலை அடிவாரத்தில் கருங்கல் ஆண்டி, தாத்தையன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய விழாவில் யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பூஜாரி சீலமநாயக்கர், ஊர் நிர்வாகி நாகமுத்து நாயக்கர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். இதை தொடர்ந்து குதிரை சிலை கண் திறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாட்டினை புதுகொம்பேரிபட்டி சின்னஆண்டிச்சாமி குடும்பத்தினர் செய்திருந்தனர். கொம்பேரிபட்டி ஊராட்சி தலைவர் ராஜரத்தினம், முன்னாள் தலைவர் ஸ்ரீரங்கன், ஊர் நிர்வாகி பழனிச்சாமி, சித்துவார்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.