Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலில் ... புதுகொம்பேரிபட்டி தாத்தையன் கோயில் கும்பாபிஷேகம் புதுகொம்பேரிபட்டி தாத்தையன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் 1000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில்; சீரமைக்காததால் மாயமாகும் அவலம்
எழுத்தின் அளவு:
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் 1000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில்; சீரமைக்காததால் மாயமாகும் அவலம்

பதிவு செய்த நாள்

04 செப்
2024
02:09

ஊந்தஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை பிச்சாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது.


மூன்றடுக்கு கோபுரம் கொண்ட இக்கோவிலில், மூலவர் சிவபெருமான், காமாட்சியம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், நவக்கிரகம் ஆகிய தெய்வ சிலைகள் உள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 50 ஆண்டுகளை கடந்து விட்டது. இக்கோவில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோவில் கோபுரம் மற்றும் கொடிமரம் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. அரசு சார்பில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. மேலும், பக்தர்கள் பங்களிப்புடன் பிரதோஷம், சிவராத்திரி விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு 3 ஏக்கர் நிலம் இருந்தது. கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வெட்டும் பணிக்காக, 1 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. தற்போது, 2 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இக்கோவில் கோபுரம் சேதமடைந்துள்ளதை, அறநிலையத்துறை கண்டும், காணாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் பிச்சாலீஸ்வரர் கோவில் கோபுரத்தை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி உள்ளது. ஈசனை பாடி என்ற பெயர் நாளடைவில், ஈச்சம்பாடி என மருவியதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். ஈச்சம்பாடி கிராமத்தின் வடகிழக்கில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பராமரிப்பு இல்லாததால், தற்போது பாழடைந்துள்ளது. கோவில் கட்டடம் மற்றும் மேல்தளத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, கோவில் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தெற்கில் உள்ள கல் மண்டப நுழைவாயிலும் சேதமடைந்து உள்ளது. எனவே, ஈச்சம்பாடி சிவாலயத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar