பதிவு செய்த நாள்
05
செப்
2024
02:09
மேட்டுப்பாளையம்; குத்தாரிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ள குத்தாரிபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று, பட்டத்தரசி அம்மனுக்கும், விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், முனியப்பன் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேட்டுப்பாளையம் மைக்கன் மாரியம்மன் கோவில் பூசாரி ராஜா, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தார். முன்னதாக மூலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் யாக வேள்விகளை நடத்தினர். கோவில் தலைவர் சின்னான், இழந்தாரி சின்னான் மற்றும் நிர்வாகிகள், பூசாரி பூபால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.