பதிவு செய்த நாள்
08
செப்
2024
06:09
மீஞ்சூர்; மீஞ்சூர், ராமரெட்டிப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் அமைந்து உள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிந்த நிலையில், மஹா கும்பாபிஷே கம் நடந்தது. கடந்த, 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷே க விழா துவங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அதிகாலை, யாகசாலை பூஜைகள், திருக்குடங்கள் புறப்பாடு நடந்தன. காலை, 7:00மணிக்கு, கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடந்து மங்கள வாத்தியங்கள் முழுங்க, வாணவேடிக்கைகளுடன், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷகேம் நடந்தது. பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடந்தது.