புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2024 06:09
புதுச்சேரி; வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ பெருந்தேவித்தாயார் – வரதராஜ பெருமாள் 46ம் ஆண்டு திருக்கல்யாண ம ேஹாற்சவ விழா, சிறப்பு அலங்காரத்துடன் காலை 8:30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து திருமஞ்சனம், சாற்றுமுறை நடந்தது. பால், தயிர், பழவகைகள், தேங்காய், இளநீர், பன்னீர்செல்வம், சந்தானம், புஷ்பம் சமர்ப்பித்த பக்தர்கள் திருமஞ்சன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாலை 6:00 மணியளவில் பெருமாள், தாயார் புறப்பாடு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண மகோற்சவம் விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோதண்டராம சுவாமி பக்த ஜனசபை, திரு கல்யாண உற்சவ பக்தர்கள் செய்திருந்தனர்.