வல்லபை விநாயகர் பூஜையில் பங்கேற்ற பிரப்பன்வலசை முஸ்லிம் ஜமாத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 11:09
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் சதுர்த்தியையொட்டி, இந்தாண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட வல்லபை விநாயகருக்கு நடந்த சிறப்பு பூஜையில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அலிநகர் முஸ்லிம் ஜமாத்தார் பங்கேற்றனர். பிரப்பன்வலசை நொச்சியூருணி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 15 ஆண்டுகளாக வல்லபை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், அன்னதானம், ஊர்வலம் நடக்கிறது. இந்தாண்டு சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதற்கு பிரப்பன்வலசையில் உள்ள அலி நகர் ஜமாத்தார் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விநாயகருக்கு நடந்த சிறப்பு பூஜையிலும் ஜமாத்தார் பங்கேற்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விநாயகர் சதுர்த்தி விழா இங்கு நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.