மேலச்செங்குடி பத்திரகாளி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 05:09
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்திரகாளியம்மன், கருப்பண சுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, மூலவர்கள் பத்ரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி ஆகியோருக்கு, சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோயிலுக்கு பாத்தியப்பட்ட நாடார் சமுதாய, குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.