பதிவு செய்த நாள்
20
நவ
2012
01:11
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நாக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதை யொட்டி, வீட்டு வாசல் முன் பாம்பு கோலமிட்டப்படி, புதுமண பெண்கள் தாலியுடன், தங்கத்திலான பாம்பு பொட்டையும் சேர்த்துகொண்டனர். தீபாவளி வந்த ஐந்தாவதுநாள் முதல் முன்று நாட்கள் , ராஜபாளையத்தில் ஒரு பிரிவினர், நாக சதுர்த்தி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாட்களில் வீட்டு வாசலில் பாம்பு போன்று கோலமிடுகின்றனர். முதல் இரு நாள் பாம்பு வீட்டிற்குள் செல்வதுபோலவும் மூன்றாவது நாள், வீட்டில் இருந்து பாம்பு வெளியே வருவது போல் கோலமிடுகின்றனர். தர்மாபுரம் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி, ""பல தலைமுறையாக இந்தவிழா கொண்டாடப்படுகிறது. தலைதீபாவளி கொண்டாடும் புதுமணதம்பதியினர், இதில் அதிகம் கலந்துகொள்வர். திருமணம் அன்று, பெண் கழுத்தில் தாலியுடன் கருகமணி கட்டுவது வழக்கம். இந்தவிழாவில் கருகமணியுடன் தங்கத்திலான பாம்பு பொட்டும் சேர்த்து கட்டப்படும். இதில் உறவினர்களும் கலந்துகொள்வர். மூன்றுநாள் விழாவிலும், வீடுகள் முன் பாம்புகள் போன்ற கோலமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம், என்றார்.