அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 10:09
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆவணி மாதம், மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நிகழ்ச்சி,ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது. நேற்று அவிநாசி வாழ் வணிக பெருமக்களால் வெகு விமர்சையாக பிட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. ஈசனின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான மூதாட்டிக்காக மண் சுமந்த வரலாற்று நிகழ்வாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு ஸ்வாமி ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரராக எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றினை எடுத்துரைக்கும் விதமாக நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பச்சரிசி புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.