பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த படலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 10:09
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளை முன்னிட்டு சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த படலம் நடைபெற்றது. திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில் வைகையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையை உடைத்தது. பாண்டிய மன்னனின் ஆணைப்படி வந்தி எனும் மூதாட்டிக்காக இறைவனார் சிவபெருமான் பிட்டுக்காக பணியாற்றினார். அப்பணியை செய்யாத இறைவனாரை அரசன் பிரம்பால் அடித்தார். அடியை அனைவரும் உணர்ந்தி இறைவன் திருவிளையாடல் நடந்தது. ஆண்டுதோறும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெறும். இதனை முன்னிட்டு நேற்று,( செப்.12.,) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் பிட்டுக்கு மண் சுமக்கும் படலம் நடைபெற்றது. அம்பாள் ஆனந்தவள்ளி, சந்திரசேகர் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினர். வாகனம் ரத வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.