காரைக்கால் சித்தானந்த சுவாமி கோவிலில் மகாகுரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 10:09
காரைக்கால்; காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமியின் மகாகுரு பூஜை விழா நேற்று நடந்தது.
காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு 110வது ஆண்டு மகாகுருபூஜை விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு திருமலைராயன் ஆற்றிலிருந்து பால் குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்களை ஊர்வலமாக கொண்டுவந்து அபிஷேகம் நடந்தது. பின் காலை 11மணிக்கு அகவத்பூஜை, கோபூஜை,கஜபூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து 12 மணிக்கு குருபூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ.மற்றும் என்.ஆர்.,காங்.,கட்சி பிரமுகர் விஜயகுமார் உள்ளிட்ட விழாக்குழுவினார்கள் மற்றும் கிராமவாசிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இரவு சித்தானந்த சுவாமிகளின் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுறை மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.