பதிவு செய்த நாள்
14
செப்
2024
12:09
அம்பாசமுத்திரம்; அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோயில் கொடை விழாவில், பெண்கள் 108 பொங்கலிட்டு, வழிபட்டனர். மேல அம்பாசமுத்திரம் சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கம்மன், தளவாய் மாடசாமி கோயில் கொடை விழா கடந்த 8ம் தேதி கால் நாட்டுதலுடன் துவங்கியது. கொடை விழாவையொட்டி நேற்று, கோயிலில் 108 பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று (14ம் தேதி) மாலை தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வருதல், இரவு பூந்தட்டு ஊர்வலம், புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாளை (15ம் தேதி) காலை பால்குடம் ஊர்வலம், மதியம் கொடை விழா தீபாராதனை, இரவு, முளைப்பாரி, கிரக குடம் வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி அதிகாலை சாமக் கொடை, தாமிரபரணியில் முளைப்பாரி கரைத்தல் வைபவம் நடக்கிறது.