கூர்ந்தான்விளை இசக்கியம்மன் கோயிலில் ஆவணி மாதசிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2024 12:09
குரும்பூர்; கூர்ந்தான்விளை இசக்கியம்மன் கோயிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடந்தது. குரும்பூர் அருகே உள்ள கூர்ந்தான்விளையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் வரதராஜ், செந்தில்குமார், சுதர்சன் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.