காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் மூலஸ்தான பாலஸ்தாபன் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2024 04:09
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் கயிலாசநாத சுவாமி ஸ்ரீநித்யகல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீபொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி முன்னிட்டு நேற்று தேவதா அனுக்ஞ விநாயகர் பூஜையுடன் துவக்கியது. இன்று காலை யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதீ தீபாரதனையுடன் பின்னர் கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி காளிதாசன், திருப்பணிக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.