மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. கோவில் நுழைவாயிலில், கருங்கல்லில் ராஜகோபுரம் அமைத்தது உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொண்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை முன்னிட்டு, மல்லிகேஸ்வரி, மல்லிகேஸ்வரர் ஆகியோருக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இரவு, சுவாமியர் கோவிலிலிருந்து புறப்பட்டு, வீதிகளில் உலா சென்றனர். விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகியோருடன் முருகர், அவர்களைத் தொடர்ந்து, அம்பாளுடன் மல்லிகேஸ்வரர் என, முக்கிய வீதிகளில் சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர்.