வடமதுரை : கொல்லப்பட்டி செல்வ விநாயகர், பாப்பாத்தியம்மன், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் புனித தீர்த்தம், முளைப்பாரி அழைப்பை தொடர்ந்து 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாக கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். ஏற்பாட்டினை கொல்லப்பட்டி சோழிய வெள்ளாளர் பங்காளிகள் செய்திருந்தனர்.