திருவண்ணாமலை ; ஆரணி அடுத்த சதுப்பேரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கிழக்கு மேடு கூட் ரோட்டில் கோதண்ட ராமசுவாமி கோவிலில்கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கும்ப ஆராதனம், மஹாசாந்தி ஹோமம், நித்ய ஹோமங்களும், கால பூஜைகள் நடந்தது. இன்று சிறப்பு பூஜைகளுக்கு பின் கும்பம் புறப்பாடாகி புனித நீர் கொண்டு வந்து மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தகர்கள் கோவிந்தா நாராயணாயன என சரணகோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.