உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில் சண்முகருக்கு புரட்டாசி சிறப்பு அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 03:09
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஸ்ரீ சண்முகர் சன்னதி உள்ளது. இதில் ஷண்முகர் வள்ளி, தெய்வானையுடன் ஆறு தலையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஷண்முகருக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் செவ்வாய்கிழமையன்று காலை சண்முகா அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி, புரட்டாசி மாத முதல் செவ்வாய் கிழமையான இன்று சண்முகா அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சண்முகரை வழிபட்டனர். ஷண்முகர் வள்ளி, தெய்வானையுடன் ஆறு முகத்துடன் வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதத்தை தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.