காஞ்சி ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு செய்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 05:09
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இன்று விரதத்தை நிறைவு செய்தார். நாளை சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி விஸ்வரூப யாத்திரை நடைபெறுகிறது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தையொட்டி, மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் தினமும் உபன்யாசம், கச்சேரி, ஆன்மிக நிகழ்வு உள்ளிட்டவை நடந்து வருகிறது. அந்த வகையில், திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேத விற்பன்னர்களுக்கான சதஸ் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 48 வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி ஆசி வழங்கினார். இவ்விழாவில் வேத பண்டிதர்கள் ஆன்மிக ஆன்றோர், என 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.