சுட்டெரிக்கும் வெயில்; ராமேஸ்வரத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கோயில்வீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2024 04:09
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோயில் ரதவீதியில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறி வீசுவதால் தமிழகத்தில் வறண்ட தட்பவெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் வெப்பம் அதிகரித்து வெயில் சுட்டெரித்தது. இதனால் ராமேஸ்வரம் தீவு முழுவதும் வெப்ப சலனம் வீசியதால் பொதுமக்கள் காலை 11 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்த்தனர். மேலும் இன்று காலை 11:00 மணிக்கு பின் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் சன்னதி தெருவில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. உணவு ஓட்டல்கள், டீக்கடைகளில் வியாபாரம் இன்றி டல்லடித்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.