பதிவு செய்த நாள்
20
செப்
2024
12:09
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமி, புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்கார பந்தலில் அருள்பாலிக்க உள்ளார். அதில், முதல் சனிக்கிழமையான நாளை 21ம் தேதி பழங்கள் அலங்காரத்திலும், வரும் 28ம் தேதி சந்தனக்காப்பு, அக்டோபர் 5ம் தேதி முத்தங்கி சேவை மற்றும் 12ம் தேதி பூவங்கி சேவையில் எழுந்தருளுகின்றனர். சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வரும் அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை அன்று, திருப்பதியில் நடைபெறுவது போன்று, ஸ்ரீவெங்கடாஜலபதிக்கு திருப்பாவாடை சேவை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.