Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈசனை நாடி வந்த சூரியன்; முக்தீஸ்வரர் ... பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை; சிறப்பு ஏற்பாடு பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய், மாடு, பன்றி கொழுப்பு! ; ஆய்வறிக்கை சொல்வது என்ன?
எழுத்தின் அளவு:
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய், மாடு, பன்றி கொழுப்பு! ; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

பதிவு செய்த நாள்

20 செப்
2024
12:09

அமராவதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான சமீபத்திய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளதன் மூலம் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்றார். இவரது பேட்டி பக்தர்களை அதிர்வடைய செய்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரிகுஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது, அதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.


தேவஸ்தான செயல் அதிகாரி கூறியது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்றார்.


ஜெகன் மறுப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். ஓய்.எஸ்.ஆர்.,கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar