தென்காசி; தென்காசி கீழபாட்டாக்குறிச்சி பிரம்மா கோயிலில் புஷ்பாஞ்சலி நடந்தது. தென்காசி, கீழபாட்டாக்குறிச்சி பிரம்மலோகம் பிரம்மா கோயிலில் நல்லிணக்கத்திற்காக ஓணம் பண்டிகை நடந்தது. இதையொட்டி அதிகாலை3 மணி முதல் 5 மணி வரை பிரம்ம மகாயாகம், காலை5 மணி முதல் 6 மணி வரை ஓணம் பூக்கோலம், காலை8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை10 மணி முதல் மாலை2 மணி வரை ஓணம் விருந்து நடந்தது. விழாவில் கோயில் நிர்வாகி சரசந்திரபோஸ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொட்டாக்குளம் இசக்கிப்பாண்டியன் செய்திருந்தார்.