Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீனிவாச ... வருகிறது நவராத்திரி... வந்தது கொலு பொம்மை! வருகிறது நவராத்திரி... வந்தது கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கல்வெட்டு படியெடுப்பு
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கல்வெட்டு படியெடுப்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2024
05:09

சென்னை; திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி ஒன்றியத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் படியெடுத்து வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஒன்றியத்தில், நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், வள்ளியூரிலிருந்து இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. இங்கு, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அழகிய நம்பிராயர் என்ற பெயரில் பெருமாள் கோவில் உள்ளது. திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலத்தை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் உள்ளிட்டோர் பராமரிக்கவும், வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தவும், பல்வேறு தானங்களை வழங்கி உள்ளனர். அவை குறித்த தகவல்கள், இந்த கோவிலில் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோவில் தற்போது ஜீயர் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் மேற்பார்வையில், பாலமுருகன் உள்ளிட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் நேற்று படியெடுக்கும் பணியை துவங்கினர். 


இது குறித்து, பாலமுருகன் கூறியதாவது: இந்த கோவிலின் கோபுரங்கள், கருவறை, பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில், 13ம் நுாற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாக பொறிக்கப்பட்ட நிறைய கல்வெட்டுகள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை, 1905லும், 1960லும், இந்த ஊர் கோவில்களில் உள்ள 15 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளது. அவற்றில், இந்த கோவிலைச் சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. நாங்கள் தற்போது ஆய்வு செய்ததில், பல கல்வெட்டுகள் படியெடுக்காதது தெரியவந்தது. தெற்கு பிரகாரத்தில் இருந்து கல்வெட்டுகளை படியெடுக்க துவங்கி உள்ளோம். முழுமையாக படியெடுத்த பின் தான், கல்வெட்டு தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar