Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி; காரமடை அரங்கநாதர் ... திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு; உறுதி செய்தது தேவஸ்தானம் திருப்பதி லட்டுவில் விலங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்

பதிவு செய்த நாள்

21 செப்
2024
07:09

ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை முன்னிட்டு இன்று (செப்.21) அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


இக்கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சீனிவாச பெருமாளை தரிசிக்க தென் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (செப். 21 ) முதல் சனிக்கிழமை உற்ஸவம துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையடுத்து ராஜ் அலங்கார பெருமாளை தரிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் கிரிவலம் நடக்கிறது. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான அக்.5 அன்று மட்டும் நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar