பதிவு செய்த நாள்
21
நவ
2012
10:11
நகரி: ஆந்திர மாநிலம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் முதல் திங்கள் கிழமையை ஒட்டி நேற்று முன் தினம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் கார்த்திகை சிறப்பு தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள் வாயுலிங்கேஸ்வரர், ஞானபிரசூனாம்பிகை தாயார் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றனர். அதிகாலை முதல் இரவு, 9:00 மணி வரை, ஏராளமான பெண் பக்தர்கள், கோவிலில் மாவிளக்கு தீபம் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர்.அத்துடன், ராகு - கேது, சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் அருகிலுள்ள கைலாசகிரி மலை மீதும், பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.