கோபுரத்தின் மேல் அமர்ந்து சூரசம்ஹாரம் பார்த்த மயில்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2012 10:11
கயத்தாறு: கயத்தாறில் சூரசம்ஹாரம் நடந்த போது கோபுரத்தின் மீது ஆண் மயில் காட்சியளித்து பக்தர்களை பரவசமடைய செய்தது.கயத்தாறு நீலகண்ட ஈஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழா நடந்தது. கடந்த 13ம் தேதி சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது. 6ம் நாள் மாலையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கயத்தாறு கீழபஜார், கடம்பூர் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு ஆகிய பகுதிகளில் சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கடைசியில் சீரணி கலையரங்கம் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது சீரணி கலையரங்கலத்தில் எதிரில் உள்ள கோபுரத்தில் ஆண் மயில் ஒன்று வந்தது.கோபுரத்தில் கிழக்கு பகுதியாக பார்த்து சூரசம்ஹார வதத்தை பார்த்தது. அதனை பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷம் முழங்க கூறி வணங்கினர். இது நாள் வரை சூரசம்ஹார நிகழ்ச்சியில் மயில் வந்தது கிடையாது.
இந்த ஆண்டுதான் ஆண் மயில் வந்து காட்சியளித்தது. பக்தர்கள் மத்தியில் பெரும் சந்தேஷத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் முருகர் பக்தர்களுக்கு காட்சி அளித்து பின்னர் புறப்பட்டு சென்றார். அப்போது ஆண்மயில் மேற்கு நோக்கி காட்சியளித்தது. கோயிலுக்குள் முருககடவுள் சென்றவுடன் மயில் பறந்து சென்றது. இரவில் மயில் வாகனத்தில் அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. அதன்பிறகு நேற்று இரவில் திருக்கல்யாணம் நடந்தது.கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். திருப்பணி வேலை நடைபெறுதவற்கான முயற்சிக்கும் இத்தருணத்தில் ஆண்மயில் வந்து காட்சியளித்தது திருப்பணி பணிகள் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையை பக்தர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.