Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ... மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி விழா மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா; தங்க சிம்மாசனம் ஜோடிப்பு அரண்மனைக்குள் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழா; தங்க சிம்மாசனம் ஜோடிப்பு அரண்மனைக்குள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

26 செப்
2024
03:09

மைசூரு: தசரா விழாவை முன்னிட்டு, மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, சிம்மாசனம் ஜோடிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால், ஐந்து நாட்கள் அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மைசூரு தசரா விழாவில், ஜம்பு சவாரி எப்படி பிரபலமோ, அதே அளவுக்கு தனியார் தர்பாரும் பிரபலம். மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, பாரம்பரிய முறைப்படி தனியார் தர்பார் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, மைசூரு பா.ஜ., - எம்.பி.,யும், உடையார் மன்னர் வம்சத்தை சேர்ந்தவருமான யதுவீர் தனியார் தர்பார் நடத்தி வருகின்றார். இதற்காக, அரண்மனையின் அம்பா விலாஸ் தர்பார் மண்டபத்தில், 450 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவார். இந்தாண்டு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தனியார் தர்பார் நடத்தப்படுகிறது. இதற்காக தங்க சிம்மாசனம், நாளை ஜோடிக்கப்படுவதாக அரண்மனை வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், தசரா விழாவை ஒட்டி, ஐந்து நாட்களுக்கு அரண்மனைக்குள் நுழைய சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் ஜோடிப்பதால், நாளை காலை 10:00 முதல், பகல் 1:00 மணி வரையிலும்; தனியார் தர்பார் நடப்பதால், அக்., 3ம் தேதி காலை 10:00 முதல், மதியம் 2:00 மணி வரையிலும்; ஆயுத பூஜையை ஒட்டி, அக்., 11ம் தேதி முழு நாளும்; விஜயதசமியை ஒட்டி அக்., 12ம் தேதி முழு நாளும்; சிம்மாசனத்தை கழற்றி பிரித்து வைப்பதால், அக், 27ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையிலும்; அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar