Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித ஜெபமாலை அன்னை தேர்த்திருவிழா ... 221 கிலோ லட்டில் பெருமாளின் விஸ்வரூப தரிசனம்; பெரம்பூரில் விமரிசை 221 கிலோ லட்டில் பெருமாளின் விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

28 செப்
2024
10:09

மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று நடந்தது. 


கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை ரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாக்கள், வெகு விமர்சையாக நடைபெறும். இன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:15 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. 4:00 மணிக்கு உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தின் உள்ளே உலா வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர். கோவில் முன் அமர்ந்திருந்த தாசர்களுக்கு, பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறி படைத்து வழிபட்டனர். பின்பு அவர்கள் வழங்கிய உணவுப் பொருளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். அக்.2ம் தேதி கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 4ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. 5ம் தேதி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்.,12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமி பூஜையும் நடைபெற உள்ளது. அன்று இரவு, குதிரை வாகனத்தில் அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி, அம்பு விடும் விழா நடைபெறும். 19ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar