பெருமாள் கோவில்களில் பெருமாள் முன் ஐந்து பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அர்க்கயம் கூடிய தண்ணீர், பாத்யம் கைக்கு தரப்படக்கூடிய, பாதங்களுக்கு உரிய நீர், ஆசமனியம் உள்ளே பருகக்கூடிய நீராகவும். ஸ்நானீயம் திருமேனிக்கு உரிய நீராகவும், சர்வார்த்த கோயம் நமக்கு தருகின்ற தண்ணீராகவும் இருக்கும். இதற்குரிய மந்திரங்கள் சொல்லும்போது. பாத்திரங்களில் நீர் ஊற்றப்படும். இவற்றில் நீர் தனியாக மற்றொரு பாத்திரம் வைத்திருப்பார்கள். இந்த பஞ்சபாத்திரம் என்கிறோம். இதில் நமக்கு தீர்த்தமாக தருகிற சர்வார்த்த தோயத்தில் துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய். இலவங்கம், மஞ்சன் ஆகிய பொருட்கள் கலந்து வைத்திருப்பார்கள் எப்படி தீர்த்தம் வாங்கணும்? இந்த தீர்த்தத்தை வாங்கும்போது பெண்களாக இருந்தால், இடது கையில் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு, வலது கையை அதற்குமேல் வைத்து வாங்க நீர்ச்சத்தை தை வேண்டும் மீண்தயாக இருந்தால் அல் மேல் வைத்து வாங்க வேண்டும். அங்கவஸ்திரம் இல் லாதவர்கள் வேட்டியின் ஒரு நுனியைப் பிடித்து வாங்க வேண்டும். அதுவும் இல்லாமல் நாகரீக உடைகளில் செல்வோர் இடது கை மேல் வலது கை வைத்து தீர்த் தத்தை வாங்க வேண்டும். தீர்த்தத்தை வாங்கிக் குடித்த பிறகு மீதமுள்ள தண்ணீரை தலையில் தட விக் கொள்வது தான் நுாற்றுக்கு 1 சதவீதம் பேர் வழக்கமாக செய்து வருகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது மிக தவறானது.