மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2024 09:10
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து குவிந்தனர். புனித நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
ஹிந்துக்கள் முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் புனித நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். இன்று( அக்.2) மாஹாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதே போன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.