Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் ... திருத்தணி முருகன் கோவிலில் நவராத்திரி விழா; அன்ன வாகனத்தில் அம்மன் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
11:10

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதனை முன்னிட்டு இன்று காலை கொடி பட்டம் மாடவீதிகள் சுற்றி வந்து வடபத்ர சயனர் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து கோபி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வட பத்ர சயனர், ஸ்ரீதேவி, பூமாதேவியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 7:00 மணிக்கு வீதியுலாவும் நடக்கிறது. அக் 8ல் கருட சேவை, அக். 10ல் பெரிய பெருமாள் சயனசேவை, அக் 12ல் செப்பு தேரோட்டம், அக். 17 மாலை 6 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. ஆண்டாள் கோயிலில் அக். 12 வரை நவராத்திரி கொலு உற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஆண்டாள் கொலு எழுந்தருள்கிறார். அக் 11ல் சரஸ்வதி பூஜையும், அக் 12ல் விஜயதசமியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar