Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொலுவில் குன்றக்குடி முருகன் கோயிலை தத்ரூபமாக உருவாக்கிய மாணவன்
எழுத்தின் அளவு:
கொலுவில் குன்றக்குடி முருகன் கோயிலை தத்ரூபமாக உருவாக்கிய மாணவன்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
05:10

காரைக்குடி; குன்றக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, தானே கொலு அமைத்து வருவதோடு குன்றக்குடி கோயிலை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.


குன்றக்குடியைச் சேர்ந்தவர் சிங்காரவடிவேல் மகன் இளம்பரிதி 17. குன்றக்குடி தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். குன்றக்குடி அடிகளாரின் உதவியாளரான சிங்காரவடிவேல் தனது மகனை கோயிலுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றதில் அங்குள்ள சிற்பங்கள், சிலைகள் மீது 10 வயதில் இருந்தே சிறுவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடு களிமண், சிமிண்ட்டில் விநாயகர் சிலை, சிவன் சிலை உட்பட பல்வேறு சிலைகளையும் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் போது, நான் செய்த பொம்மைகளை வைத்து கொலு உருவாக்கினார். ஆர்வத்துடன் சிலைகளை செய்ய தொடங்கிய இளம்பரிதி ஆறாண்டுகளாக கொலு அமைத்து அசத்தி வருகிறார். தற்போது குன்றக்குடி கோவில் அடிவாரத்தில் இருந்து மலை கோபுரம் வரை தத்ரூபமாக செய்து தனது குழுவில் வைத்து அசத்தியுள்ளார்.


இளம்பரிதி கூறுகையில்: கோயில்களுக்கு செல்லும்போதசிலைகளை பார்த்து அதை செய்ய வேண்டும் என்று ஆசை தோன்றியது. முதன்முதலில் விநாயகர் சிலை செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து முருகர், சிவன் சிலை, அம்மன் சிலை உட்பட பல்வேறு பொம்மை சிலைகளை உருவாக்கினேன். எனது தந்தை எனது ஆர்வத்தை புரிந்து எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கித் தருவார். அட்டைப்பெட்டியில் வைத்து விளையாட்டாக கொழு பொம்மை அமைத்தேன். தற்போது பெரிய அளவில் எனது வீட்டிலேயே கொழு அமைத்துள்ளோம். விரதத்தின் முறையாக கடைபிடித்து வழிபாடு செய்து வருகிறோம். தவிர, டிஜிட்டல் பெயிண்டிங், பென்சில் டிராயிங் உட்பட ஓவியத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar