புரட்டாசி சனி, நவராத்திரி பண்டிகை; கோவை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2024 10:10
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.இதில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவராத்திரி பண்டிகை கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான நேற்று கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் ஆலயத்தில் மங்களாம்பிகை அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.