புரட்டாசி மூன்றாம் சனி; பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2024 03:10
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலூர் எஸ்பி அலுவலகம் எதிரில் உள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விருத்தாச்சலம் சாத்துக்கூடல் ரோடு வரதராஜ பெருமாள் திருப்பதி மலையப்பர் ஆண்டாள் பெருந்தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், திண்டிவனம் அலமேலு மங்கா சமய சீனிவாச பெருமாள், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.