நவராத்திரி விழா: சதஸ் அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2024 05:10
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான இன்று (அக்.,5) மூலவர் பெரியநாயகி அம்மன் சதஸ் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவையொட்டி கோயில் சுற்று பிரகாரத்தில் சிவன், விநாயகர், ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான கொழு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.