பொள்ளாச்சி பகுதி கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி, தினமும் விதவிதமான அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சக்தியின் பல்வேறு வடிவங்களை வழங்கும் புகழ்பெற்ற விழா, நவராத்திரி பண்டிகை. ஒன்பது நாட்கள், ஒன்பது விதமான சக்தியின் வடிவங்களை அம்மன் ரூபத்தில் கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை உள்ளது. இதற்காக, கோவில்களில் அம்மனுக்கு பல வித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வீடுகளில் கொலு வைத்தும் வழிபாடு செய்யப்படுகிறது. பல கோவில்களில் பக்தர்களை கவரும் வகையில் சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.